டில்லியில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: புகைப்படத்தை வெளியிட்டது காவல்துறை

டில்லி நகருக்குள்  இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் தரவும்  காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாப் எல்லைப் பகுதியில் மைல்கல் ஒன்றின் மீது சாய்ந்தபடி நிற்கும்படியான இருவரின் போட்டோவை டில்லி  காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பெரோசிபூர் பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை யாராவது பார்த்தால் உடனடியாக தகவல் தரும்படி காவல்நிலைய தொலைப்பேசி எண்ணையும்  காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜெய்சி இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 6 அல்லது 7 பயங்கரவாதிகள் பஞ்சாப்பில் இருந்து டில்லி நோக்கி சென்றதாக பஞ்சாப்  காவல்துறையினர் கடந்த வாரம் எச்சரிக்கைவிடுத்திருந்தனர். இதனால் வாகன சோதனையை தீவிரப்படுத்தி, அனைத்து சோதனை சாவடிகளும்  எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

#Terrorists #infiltrated #Delhi  #photo