காஷ்மீரில் ஊடுருவ முயன்ற  பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் :

ந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.  இருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

download

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக, பாகிஸ்தான்  ஆதரவு பயங்கரவாதிகள், எல்லையை தாண்டி ஊடுருவ முயன்று வருகிறார்கள். அம்மாநிலத்தின் குப்வாரா பகுதியில், ஊடுருவ முயன்ற, பயங்கரவாதிகள், நான்கு பேர், நேற்று முன்தினம், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர், வீர மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை அருகே, பயங்கரவாதிகள் நேற்று ஊடுருவ முயன்றனர். அப்போது, அவர்கள் மீது, பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.