புழல் சிறை அதிகாரியை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்? பரபரப்பு

சென்னை:

புழல் சிறையில் கைதிகள் பலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தை பகிரங்கப்படுத்திய  சிறை அதிகாரி சுப்பையாவை கொல்ல சிறையில் உள்ளபயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

புழல் சிறையில் சொகுசாக வாழ்ந்து வந்த கைதிகள்

தமிழகத்தின் மிகப்பெரிய சிறையான புழல் சிறைச்சாலையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்தது.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் உள்பட பலர், டிவி, மெத்தை என  சுகபோகமாக வாழ்ந்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ கைதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், சிறையில் தாங்கள் உல்லாசமாக இருந்ததை அம்பலபடுத்திய புழல் சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை  கொல்ல சதி  திட்டம் தீட்டியது தெரிய வந்ததுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உளவுத்துறை எடுத்து வந்த தீவிர நடவடிக்கையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புழல் சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை கொலை செய்ய போலீஸ் பக்ரூதீன் திட்டம் தீட்டியிருப்பதாகவும், இது தொடர்பாக சக கைதிகள் இடையே நடந்த உரையாடல் மோப்பம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை கேட்டு சிறை நிர்வாகத்துக்கு உளவுப்பிரிவு கடிதம் அனுப்பியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed