திருப்பதி:

லங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு பயங்கவாத அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில்,  திருப்பதியில் சுற்றித்திரிந்த 12 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, கடந்த வாரம் இலங்கையில் தேவாலயங்கள் உள்பட பல பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் சுமார் 500 பேர் படுகாயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. குறிப்பாக தொன் மாநிலங்களான  தமிழகம் மற்றும் ஆந்தி, கர்நாடக, கேரளா மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு உள்ளது. அங்கு  ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, திருமலையில்,  சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 12 பேரை போலீசார்   கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.