காபூல்

ப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர்.   வாக்காளர் பட்டியலின்படி அங்கு 600 பேர் மட்டுமே உள்ளனர்.  அங்கு காபூல் மற்றும் ஜலாலாபாத் ஆகிய இரு இடங்களில் மட்டும் குருத்வாரா உள்ளது.  இவர்கள் மீது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஐ எஸ் ஐ எஸ் – கே என்னும் இஸ்லாமிய இயக்கம் சமீபத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

ஆப்கான் சீக்கியர்களை பாகிஸ்தான் அரசு பெஷாவருக்கு இடம் மாறும்படி பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.   இந்நிலையில் ஆப்கான் சீக்கியர்களான குர்நாம் சிங் மற்றும் சர்பால் சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், “ஒரு ஆப்கான் தீவிரவாத இயக்கம் எங்களை 10 நாட்களுக்கும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் எனவும்  இல்லையென்றால் அனைவரும் கொல்லப்படுவார்கள் எனவும் மிரட்டி உள்ளது.  எங்கள் குருத்வாராவை சுற்று 200 ஆப்கான் ராணுவ வீரர்கள் காவலுக்கு உள்ள நிலையில் அந்த இயக்கம் எங்களை மிரட்டி உள்ளது.

இந்த மிரட்டலுக்கு பிறகு ஆப்கான் சீக்கியர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்தி உள்ளனர்.  குருத்துவாராவுக்குக் கூட யாரும் செல்வதில்லை.  நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு மாற போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே வேளையில் அவர்கள் எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகின்றனர் என்பதைத் தெரிவிக்கவில்லை.