கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.

உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ்.  இந்தியாவிலும் சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கர்நாடக மாநிலம் உப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மடிவாலா என்ற 56 வயது நபர் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந் நிலையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்காமலேயே அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

You may have missed