சென்னை

சென்னை நகர மருத்துவமனை ஆய்வில் கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு நேரடி கொரோனா பரவல் ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுமா என்றொரு கேள்வி இருந்து வந்தது.  பொதுவாக கொரோனா பாதிப்பு உள்ள தாயிடம் இருந்து கருவிலேயே இந்த தொற்று உருவாகும் என விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இது குறித்து சென்னையில் ஒரு சோதனை நடந்துள்ளது.

இந்த சோதனையை மகப்பேறு மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் வித்யா சுப்ரமணியன் நடத்தி உள்ளார்.  இதில் 500 தாய்மார்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடந்தது.  அத்துடன் குழந்தைகளிடம் முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் படி முதல் நாளே கொரோனா உறுதி ஆகி இருந்தால் குழந்தைக்குக் கருவில் இருந்து நேரடி தொற்று உள்ளது உறுதி ஆகும் எனவும் மூன்றாம் நாளில் இருந்தால் கருவில் தொற்று இல்லை என்பது உறுதி ஆகாது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.

இவ்வாறு சோதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தைக்குக் கூட முதல் நாள் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியபட்டுள்ள்ளது.   இதன் மூலம் இதுவரை எந்த குழந்தைக்கும் கருவில் கொரோனா தொற்று ஏற்படுவது இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.