சென்னை:

மிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 சதவிகிதம் ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றும், 99 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆசிரியர்களின் திறமைகளை எண்ணி நாடே சிரிக்கிறது.

தமிழகத்தில், ஆசிரியர்கள் பணிக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 3,79,733 பேர் தேர்வு எழுதினர். இரண்டு தாள்களாக இந்த தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது.

இநத நிலையில்,   2ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலும் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3லட்சத்து 79ஆயிரத்த 733 பேர் எழுதிய நிலையில், வெறும் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கல்வி அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் வேளையில், தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்கள் மட்டுமே தேசிய தேர்வுகளை எதிர்கொள்வதில் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக  மாணவ மாணவிகளின் எதிர்காலம் பாழாகிறது.

இதை தடுத்து, கல்வியறிவை உயர்த்தும் நோக்கில் நடப்பாண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 99 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளது கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.