‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 12ந்தேதி வரை நீட்டிப்பு…..

சென்னை:

மிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்  (5-4-2019) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை காவல அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வை  இடைநிலை ஆசிரியர்  பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.

அதேபோன்று 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

இந்த நிலையில் தற்போதைய 2019ம்  ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி 15-3-2019 முதல் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க  மார்ச் 5ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கந்த ஒருசில நாட்களாக ஆன்லைன் விண்ணப்பம் பதிவதில் குளறுபடிகள் நீடித்து வந்ததால், இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய விருந்த நிலையில் கால அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12ந்தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.