மும்பை:

சிவசேனா கட்சி  நிறுவனர் மறைந்த பால்தாக்கரேயின்  வாழ்க்கை வரலாறு திரைபடமாகிறது.

இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் இதி்ல் பாலிவுட்நடிகர் அமிதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அமிதாப் பச்சன் மற்றும் ஷிவ் சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரால் நேற்று மும்பையில் படத்தின் டீஸர் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராஜஸ்தான் எம்.பி. மற்றும் சிவ சேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் ஆகியோரும் தாக்கரேயின் படத்தையும் தயாரிக்கின்றனர். இது அபிஜித் பன்ஸால் இயக்குகிறார்.

படத்தின் தொடக்க விழாவின்போது, படம் குறித்த டீசர் வெளியிடப்பட்டது. சுமார் 43 நிமிடம் ஓடும் அந்த டீசர் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பால்தாக்கரேவாக  நவாசுதீன் சித்திக் என்பவர் நடிக்க இருக்கிறார். அவர் பார்ப்ப தற்கு தாக்கரே போன்ற தோற்றத்திலேயே இருப்பது படத்தின் அமைப்புக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

இந்த படத்தின் டீசரை நவாசுதீன் சித்திக்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டின் உண்மையான கிங் சிங்கை சித்தரிக்கும் ஒரு கௌரவம் மற்றும் பெருமை” தனக்கு கிடைத்திருப்பதாக  கூறி உள்ளார்.

மேலும், இந்த படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தாக்கரேவை வெகுவாக புகழ்ந்தார்.

அப்போது,. “ஜெயாவும் நானும் திருமணம் செய்து கொண்டபோது, பாலா சாஹேப் மற்றும் மகா சாகேப் (மினா டாய் தாக்கரே) ஜெயா அவர்களின் மருமகளைப் போலவே வரவேற்றார். அதன் பிறகு, தாக்கரே குடும்பத்துடன் என் உறவுகள் ஒரு குடும்பத்தைப் போல் இருந்தது,” என்று அவர் நினைவூட்டினார்.

மேலும், “நான் கூலி படத்தின்போது விபத்தை சந்தித்தேன். அதன் காரணமாக  நான் பெங்களூரி லிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டேன், அது மழை காலமாகையால்  ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை, அந்த நேரத்தில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஷிவ் சேனா வின் ஆம்புலன்ஸ் தான் என்று நினைவு கூர்ந்த அமிதாப், அதற்காக நான்  பாலாசாஹேபிற்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறேன் “என்று அவர் கூறினார்.

இப்படம் குறித்து, தறபோது மொரிஷியஸில் உள்ள  நாவசுதீன் சித்திக்  வீடியோவில் தோன்றி பேசினார். அப்போது, தேசிய விருது பெற்ற நடிகர், “பாலாசாஹேப்  குறித்து பேசியதும், இந்த படத்தில் தான் நடிப்பது  ஒரு கௌரவம் … இது ஒரு பெரிய பொறுப்பு என்பது  எனக்கு தெரியும்,  என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,  படத்தின் டீஸரை வெகுவபாக பாராட்டினார். அப்போது,  “பாலா சாஹேப் படத்தில் நடிப்பது என்பது எளிதான பணி அல்ல … அதுபோல,  இது ஒரு ஹீரோ-ஹீரோயின் படம் அல்ல … இது சாதாரண மனிதனை ஒரு நாயகனாக உருவாக்கிய நபரின் படம்” என்று  கூறினார்.

இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற   நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்ததும் ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கி 2019-ல் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பால்தாக்கரே படம் டீசர்

https://www.youtube.com/watch?v=wpUwdr4IRvs&feature=youtu.be&t=3