பாங்காக்

தாய்லாந்து அரசு விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ் குண்டான பயணிகளுக்கு விமான மேல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

விமானத்தில் முதலில் மேல் வகுப்பு (பிசினஸ் கிளாஸ்) பயணிகளும் அதன் பிறகு கீழ் வகுப்பு (எகானமி கிளாஸ்) பயணிகளும் அமர வைக்கப்படுவது வழக்கம்.    மேல் வகுப்பில் பெரிய இருக்கைகள் சற்று தாராளமான இட வசதியுடன் அளிக்கப் பட்டிருக்கும்.     அதே போல இரு வகுப்புகளிலும் முன் வரிசை இருக்கைகளுக்கு முன்பு அதிக இடம் இருப்பதால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு அளிக்கப்படும்.

தாய்லாந்து அரசு விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ் தனது விமானத்தில் குண்டாக உள்ள பயணிகளுக்கு மேல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.   இதற்கு, ”சாதாரணமாக  குண்டான பயணிகளுக்காக பாதுகாப்பு பெல்ட் நீட்டிக்கப் படுவது வழக்கம்.    ஏர் பேக் என சொல்லப்படும் காற்றுக் கவசம் பெல்டின் இடையில் இருக்கும்.    அதனால் அந்த காற்றுக் கவசத்தினால் அபாய நேரங்களில் பயணிகளுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிக்க முடியாது” என காரணம் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் குண்டான பயணிகள் மேல் வகுப்பில் பயணம் செய்வதை ஊக்குவிக்கின்றன.   இது பயணிகளுக்கு சௌகரியமாக இருப்பதுடன்.   அவர்களுக்கு தாராளமாக இடமும் கிடைக்கும் என்பதே காரணம் ஆகும்.

அத்துடன் தாய் ஏர்வேஸ் நிறுவனம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு முன் வரிசையில் இடம் அளிப்பதையும் நிறுத்தி உள்ளது.