தை பிறந்ததும் தமிழகத்தில் வழி பிறக்கும்! மு.க.ஸ்டாலின் ஆரூடம்…

சென்னை: திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை  பொதுமக்களுக்க வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம். எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதார்கள். தை மாதம் பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது. இன்னும் நான்கு மாதத்தில் நமக்கு வழி பிறக்கப்போகிறது என்றவர்,  கடந்த 10 ஆண்டு காலம் நாம் ஆட்சியில் இல்லை என்றாலும், கொரானா காலத்தில் உலகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு நாம் ஒன்றினைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.