தாய்லாந்து : மீட்கப்பட்ட சிறுவர்களை காண தவிக்கும் பெற்றோர்

சியாங் ராய்

குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதால் அவர்களை காண பெற்றோர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் குகைக்குள் சுற்றுலா போன 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் கடும் மழையால் சிக்கிக் கொண்டனர்.   கடும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   அந்த 13 பேரும் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.

மீட்புக் குழ்வின் தலைவர் சமீபத்தில்  அந்த சிறுவர்கள் மருத்துவமனையில் உள்ள வீடியோவை வெளியிட்டார்.  சிறுவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் கவலைப்பட தேவை இல்லை எனவும் அவர்கள் உடலளவிலும் மன அளவிலும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுவர்களும் பயிற்சியாளரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை சந்தித்து உரையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.   அவர்கள் தங்கி உள்ள அறையின் கண்ணாடி வழியாக பார்க்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது