பாங்காக்

தாய்லாந்து மன்னரான பூமிகால் அதுல்யதேஜின் உடல் இறந்து ஒராண்டுகளுக்குப் பின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

பூமிபால் அதுல்யதேஜ் தாய்லாந்து நாட்டை 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்தார்.   சக்ரி அரச வம்சத்தை சேர்ந்த இவர் இந்த வம்சத்தின் ஒன்பதாவது அரசர் ஆவார்.   இவர் கடந்த 2016ஆம் வருடன் அக்டோபர் 13ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.   இவர் மரணத்தையொட்டி தாய்லாந்தில் ஒரு வருடமாக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

நேற்று மன்னரின் உடல் புத்த மத வழக்கப்படி தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   அரண்மனையில் ஐந்து நாட்கள் புத்தமத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்த பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மன்னரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.   பிறகு ராணுவ மரியாதையுடன், மன்னரின் மகன் வஜ்ரலோங்கோன் எரியூட்டினார்.   இவரே அடுத்த மன்னர் ஆவார்.

நாடெங்கும் மன்னரின் தகனத்தையொட்டி விடுமுறை விடப்பட்டிருந்தது.   தாய்லாந்து மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற மன்னரின் மறைவுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.   பல நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டதால் கடுமையான பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.   செல்ஃபி, மொபைல் உபயோகங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.