பாங்காக்

பாங்காக் ராணுவ நீதிமன்றம் முகநூலில் அரசரை அவமதிக்கும் பதிவினை பதிந்ததற்காக 34 வயது இளைஞர் ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் முடியாட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய அரசர் மஹ வஜிரலொங்கொர்ன் 2016 முதல் அவரது தந்தையின் மறைவுக்குப் பின் பதவி வகித்து வருகிறார்.

தாய்லாந்து சட்டத்தின் படி அரசரையோ அரச குடும்பத்தையோ சிறிது அவமதித்தாலும் அது அரசதுரோக குற்றமாகும்.

விச்சாய் என்னும் 34 வயது இளைஞர் முகநூலில் பல்வேறு பெயர்களில் கணக்கு தொடங்கி அரசர் மற்றும் அவர் குடும்பத்தினரைப் பற்றி பதிந்து வந்தார்.

இது தொடர்பாக 10 குற்றங்கள் பதியப்பட்டன.

இதை விசாரித்த ராணுவ நீதி மன்றம் அவர் மேல், குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வீதம், மொத்தம் 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஆனால் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட படியால் விச்சாவின் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

அரச துரோகக் குற்றங்களின் விசாரணை ரகசியமாகவே நடைபெறும்.

தடை செய்யப் பட்ட பதிவுகள், மீடியாவில் மீண்டும் பதிவதை தடுக்கவே இந்த சட்டம்.

அதன்படி இந்த விசாரணையிலும் மீடியா அனுமத்திக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு இன்னொரு அரசதுரோகக் குற்றத்தில் ஒரு வீடியோவை பதிந்த ஒருவருக்கு  இரண்டரை வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இது போல தண்டனைகள் ஜாமீனில் வர இயலாத தண்டனைகளாகவே உள்ளன.

யுனைடெட் நேஷன் மனித உரிமைக் கமிட்டி தாய்லாந்தின் இது போன்ற சட்டங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.