பாங்காக்: அதிகளவில் செலவுசெய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகள் விஷயத்தில் கவனம் செலுத்த தாய்லாந்து சுற்றுலாத் துறை முடிவுசெய்துள்ளது. இதன்பொருட்டு அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாட்டின் விமானப் போக்குவரத்து துறையின் உதவியும் கோரப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் ஜூலை 1ம் தேதி வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட முழுமையாக தளர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில், அந்த நாட்டிற்கு முதற்கட்டமாக வரும் வெளிநாட்டினரில், பெரும்பாலானவர்கள், தாய்லாந்தில் வர்த்தகம் செய்வோர், பெரிய முதலீடுகளை வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்பங்களை வைத்திருப்பவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும, அரசுடன் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் அதிகளவில் செலவுசெய்யத்தக்க வசதியான பயணிகளால் தாய்லாந்திற்கு வரஇயலாத சூழல் உள்ளது.
எனவே, இதுதொடர்பாக தனி விமானங்களை இயக்கும் நிலையிலுள்ள விமான நிறுவனங்களின் ஒத்துழைப்புக் கோரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.