தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிட மன்னர் எதிர்ப்பு: பின்வாங்கியது தாய் ரக்சா சார்ட் கட்சி

பாங்காக்:

மன்னர் குடும்பத்தில் பிறந்த தாய்லாந்த் இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மன்னர் வஜ்ரலாங்கோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, மன்னரின் விருப்பத்தின்படியே நடப்போம் என்று தாய் ரக்சா சார்ட் கட்சி அறிவித்துள்ளது.


தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்சன் ஷின்வந்த்ரா ஊழல் காரணமாக பதவி விலகினார். ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் ராணுவ ஜெனரலான பிரயூத் சான் ஒஜா பிரதமரானார்.

இந்நிலையில், தாய்லாந்துக்கு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி உபோல்ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ரலாங்கோனின் ,தங்கையான உபோல்ரத்னா ,மன்னர் குடும்பத்து மரபை மீறி அரசியலில் குதித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் முதல் குழந்தைதான் உபால்ரத்னா இவர் தாய்லாந்து இளவரசியாக உள்ளார்.

பீட்டர் ஜென்சன் என்ற அமெரிக்கரைத் திருமணம் செய்து கொள்வற்காக அரச பதவிகளை இழந்தார்.
விவாகரத்தாகி தாய்லாந்து திரும்பிய நிலையில், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் மகனைப் பறிகொடுத்தார்.

அவர் அரண்மனைக்குத் திரும்பாத போதிலும் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவராகவே பார்க்கப்படுகிறார்.
திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிப்பது, மேடைகளில் பாடுவது என மக்களிடையே பிரபலமாகியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு, அவரது இளைய சகோதரரும் அரசருமான வைஜ்ரலங்கோன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், மன்னர் குடும்பத்தினருக்கு மாண்பு போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தாம் சாதாரண குடிமகளாகவே போட்டியிடுவதாக உபோல் ரத்னா விளக்கம் அளித்திருந்தார்.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மன்னர் எதிர்ப்புத் தெரிவித்ததை ஏற்று, இளவரசியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த முடிவை திரும்பப் பெற தாய் ரக்சா சார்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.