நாம் மறந்துவிட்ட வாழை இலையை தாய்லாந்து நாட்டினர் எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்…. அங்கு பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக, வீணாகும் வாழை இலைகளைக் கொண்டு காய்கறிகளை பாதுகாத்து வருகிறார்கள்…

தாய்லாந்து நாட்டின்  வணிக நிறுவனங்களில் காய்கறிகள் பச்சை பசேலென்று இருக்கும் வகையில், அனைத்து விதமான காய்கறிகளும் வாழை இழைகளைக்கொண்டே சுற்றி வைக்கப்பட்டும் பேக் செய்யப்படும் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண  காய்கறி வணிகர்கள் முதல் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான காய்கறிகளும் வாழை இலையை மூலம் பேக் செய்யப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.

இது ஒரு வகையில் அந்த நாட்டின் விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், பிளாஸ்டிக் பயன்பாடுகளும் அறவே தவிர்க்கப்படுகிறது….

நமது நாட்டிலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழை இலை பயன்பாடு சிறப்பாக இருந்தது.  ஆனால், துரித உணவு முறைக்கு மாற மாற இயற்கை வளங்களை மறந்துவிடுகிறோம்…. நாகரீகம் வளர வளர எராளமான நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்துவதை விட்டு விட்டோம் அல்லது மறந்துவிட்டோம்.

முக்கியமாக, நமது முன்னோர்கள் பின்பற்றிவந்த பல முக்கியமான இன்றியமையாத பழக்கங்களைக் கூட தவிர்த்துவிட்டோம். அதில் முக்கியமானது வாழை இலை. மருத்துவ சக்தி மிகுந்த வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் ஆரோக்கியமாகும். நம் உடலில் உள்ள மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அதுபோல,  தீக்காயங்கள் ஏற்பட்டால், வாழை இலையைக்கொண்டு, உடலின் கீழிருந்து மேல் பகுதி வரை அதை சுற்றிக் கொள்ளும் பழக்கமும் இன்று உண்டு. வாழை இலை, வெப்பத்தையும், உடலில் உள்ள தீக்காயங்களையும் குறைக்கும் தன்மை கொண்டது.

இவ்வளவு மருத்துவ சக்தி கொண்ட வாழை இலையை நாமும் பயன்படுத்தலாமே…..நமது நாட்டு பெரு வணிகர்கள் முதல் சிறுவணிகர்கள் முதல் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, இதுபோன்று வாழை இலையை கொண்டு காய்கறிகளை பாதுகாத்து விற்பனை செய்யலாமே…. முயற்சியுங்கள் வியாபாரிகளே….

உலக நாடுகள் நாசக்கார பிளாஸ்டிக் பொருட்களை  தவிர்த்து வரும் வேளையில், நாமும், விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக வாழை இலையை அன்றாட வாழ்வில் பயன்படுத்த உறுதி ஏற்போம்…