சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து

--

பாங்காக்

தாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.

தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.1% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் “விசா ஆன் அரைவல்” என சொல்லப்படும் உடனடி விசா திட்டம் எனக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி பயணிகள் முன் கூட்டியே விசாவுக்கு விண்ணப்பம் செய்யத் தேவை இல்லை. தாய்லாந்தை அடைந்தவுடன் விமான நிலையத்தின் சுமார் 60 டாலர் செலுத்தி சுற்றுலா விசாவை பெறலாம். இதை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் பலரும் தாய்லாந்து நாட்டுக்கு செல்வதை விரும்புகின்றனர்.

தற்போது சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து அரசு இந்த விசா கட்டணத்தை வரும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு நேற்று தாய்லாந்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.