சர்வதேச புகழை எதிர்கொள்ளும் தாய்லாந்து குகை சிறுவர்கள்

பாங்காக்:

தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக் குகைக்குள் ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெரு க்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருந்த இடம் கண் டுபிடிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான மீட்பு குழுவின் உதவியுடன் சிறுவர்களும், பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதை வெற்றி கரமாக முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இச்சம்பத்தை அடிப்படையாக கொண்டு 2 ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் குகையில் இருந்த மீட்கப்பட்ட சிறுபவர்களுக்கு புதிதாக ஒரு சவால் ஏற்பட்டுள்ளது. அது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான புகழ். இதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 11 முதல் 16 வயதுக்குள்ளான அந்த சிறுவர்கள் ஒரு வாரம் மருத்துவமனையிலும், பின்னர் ஒரு மாதத்துக்கு வீட்டிலும் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது.

துவாங்பெட்ச் பிராபம்தெப் என்ற 13 வயது சிறுவனின் 64 வயது பாட்டி காம் ஓயே பராம்தெப் கூறுகையில்,‘‘எனது பேரனை இந்த உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. அவன் குகையில் சிக்கி மீண்டு வந்த பின்னர் தாய்லாந்தில் உள்ள ஒவ்வொருவரும், உலகளவில் இருந்தும் உதவிகள் செய்ய முன்வ ந்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் என்ன திரும்ப செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. எங்களிடம் ஒன்றும் இல்லை. அவர் நல்ல பையனாக விளங்க வேண்டும்’’ என்றார்.

சர்வதேச மீட்டு குழுவினர் இதில் ஈடுபட்டதாக உலகளாவிய கவனம் இந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. அதனால் உலக வரைபடத்தில் இது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த மீட்டு பணியை அருங்காட்சியமாக அமைத்து காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சிறுவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ தொடங்க வேண்டும் என்று லண்டன் மன உளவியல் மருத்துவர் ஆண்டிரியா டான்ஸே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘சிறுவர்கள் தங்களது சாதாரண வாழ்க்கையை நோக்கி மீண்டும் செல்ல வேண்டும். அவர்கள் தங்களது அன்றாட பணியை செய்ய தொடங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அச்சம் தீர்ந்துவிட்டது என்று அவர்கள் உணர வேண்டும்’’ என்று தெரிவிததுள்ளார்.

தாய்லாந்து பிரதமர் பிராயுத் சான் ஓச்சா கூறுகையில்,‘‘ சிறுவர்களுக்கு போதுமான நேரமும், தனிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை பற்றி கவலைப்படாமல் அவர்களை தொடர்ந்து படிக்க செய்ய வேண்டும். இது தான் அவர்களுக்கு நல்லது’’ என்றார்.

இதேபோல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு சில்லே பகுதியில் உள்ள சான் ஜோஸ் தங்க சுரங்க தொழிலாளர்கள் 33 பேர் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். இதில் மீண்ட ஒருவர் தற்போது பாதித்த ஒரு சிறுவனின் பெற்றோரை சந்தித்துள்ளார். அப்போது அவர் வக்கீல்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.