பாங்காக்:

தாய்லாந்தின் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி உபோல்ரத்தானா களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2014-ம் ஆண்டு திடீர் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா, அப்போது நடைபெற்ற ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தார்.

அதன்பின்னர் அவரே பிரதமராக தொடர்ந்தார். தேர்தல் நடத்த தாமதப்படுத்தி வந்த அவர், தற்போது தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தானா மார்ச் 24-ம் தேதி நடக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்த்து பிரதமராக இருக்கும் பிரயுத் சான் ஓச்சா, பலாங் பிரச்சாரத் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மன்னர் குடும்பத்திலிருந்து ஒருவர் நேரடி அரசியல் களத்தில் குதிப்பது இதுவே முதல்முறையாகும்.