வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)

டலூர் வள்ளலார்  ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வள்ளலாரின்  148-வது ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. ஜோதி தரிசனத்தை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்து பரவசமடைந்தனர்.

காலை 6 மணிக்கு நடைபெற்ற ஜோதி தரிசனம்

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று  ஜீவகாருண்ய நெறிகளை போதித்த அருட்பிரகாச வள்ளலார் சமாதியான நளை குறிக்கும் விதமாக வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம் நடை  பெற்று வருகிறது.

இன்றைய தினம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசம் காண்பிக்கப்படுகிறது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வடலூரில்  குவிந்துள்ளனர்.

10 மணி அளவில் நடைபெற்ற ஜோதி தரிசனம்

7 திரைகள்:

1. கறுப்புத்திரை – மாயசக்தி,
2. நீலத் திரை- திரியா சக்தி,
3. சிவப்புத் திரை – இச்சாசக்தி,
4. பச்சைத்திரை- பராசக்தி,
5. பொன்திரை- ஞானசக்தி,
6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,
7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

முதல் ஜோதி தரிசனம் இன்று காலை  காலை 6 மணிக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து  காலை 10 மணி, பிற்பகல் 1 மணி,  இரவு 7 மணி மற்றும்  இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம்  நடைபெற உள்ளது. நாளை  செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வள்ளலாரின் ஜோதி தரிசனத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து  நீங்களும் தரிசிக்கலாம்…

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Jothi dharsan, Jothi video, Vadalur Vallalar, vallalar jothi video, Vallalar Sathygana sabha, அருட்பெருஞ்ஜோதி., இன்று தைப்பூசம், சத்தியஞான சபை, ஜோதி தரிசனம், தனிப்பெருங்கருணை!, தைப்பூச ஜோதி தரிசனம், வடலூர் வள்ளலார், விடியோ
-=-