தல60: அஜித்தை அடுத்து இயக்கப்போவது வெங்கட் பிரபு?

சென்னை:

ஜித்தின் அடுத்த படமான தல60-ஐ  இயக்கப்போவது வெங்கட் பிரபு என்ற தகவல்கள் பரவி வருகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும்  பிங்க் என்ற ரீமேக்  படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்கப் போவதுயார் என கேள்வி எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் வெங்கட் பிரபு மற்றும் மற்றொரு தரப்பினர் எச்.வினோத் என்றும் கூறி வருகின்றனர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’  படத்தை இயக்கிய எச்.வினோத்தான் தற்போது பிங்க் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படமாக கூறப்படும் தல60 என்ற படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன் என கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தல60 படத்தை இயக்குனர்  வெங்கட் பிரபு இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், போனிகபூர் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு பிங்க் பட இயக்குனர் எச்.வினோத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ajith Kumar, Bonikapoor, Director Venkat Prabhu, Director Vinoth, thala60, அஜித் புதிய படம், அஜித்குமார், எச்.வினோத், தல60, போனி கபூர், வெங்கட் பிரபு
-=-