சர்வதேச அளவில் சிறந்த நடிகராக ’ விஜய் ’தேர்வு

2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக சிறந்த நடிகருக்கான விருதை விஜய் பெற உள்ளார்.

vijay

2014ம் ஆண்டு முதல் லண்டனை சேர்ந்த IARA (International Achievement Recognition Awards) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக சா்வதேச அளவில் விருதுகளை வழங்கி வருகிறது.

2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் நடிகா் விஜய்யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. நடிகா் விஜய் தவிா்த்து ஜோஷிவா ஜாக்சன், கென்னத் ஓகோலி, டாய்ம் ஹாசன் ஆகியோா் இறுதிப் பட்டிலுக்கு முன்னேறினா்.

இந்த நிலையில் மொ்சல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திதன் காரணமாக நடிகா் விஜய் 2018ம் ஆண்டின் உலகின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதாக IARA அமைப்பு அறிவித்துள்ளது. இவருடன் சேர்த்து ஹாலிவுட் நடிகர்கள் ஏழுபேர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளனர்.

vijay

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பாலிவுட் நடிகா்கள் ஒருவா் கூட இடம் பெறாத நிலையில், விஜய் பரிந்துரைக்கப்பட்டு உலகின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளாா். சர்வதேச அளவில் விருதுபெறும் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விஜய்க்கு அளிக்கப்படும் இந்த விருதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி