நடிகர் கமல்ஹாசன் அடுத்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் கலந்துரையாடினர்.இந்த உரையாடலை அபிஷேக் தொகுத்து வழங்கினார்.

வந்தே மாதரம் பாடல் பல பரிமாணங்களில் இருப்பது போல தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் கமல்-ரகுமான் இணைந்து உருவாக்க வேண்டும் என அபிஷேக் கோரிக்கை வைக்க ; கலைஞன் என்பவன் wild animal போல, பெட் ஆக்கிக்கொள்ள முடியாது. வைல்டாக இருந்தால் தான் கலைஞனின் பனி சிறப்பாக இருக்கும். அது போல நான் ரகுமானை அதிகம் force செய்தால் அது யானைக்கு அன்னாசி பழம் கொடுத்தது போல ஆகிவிடும் நான் இதை ஒரு வருடத்திற்கு முன்பே ரகுமானிடம் கூறினேன். நான் காட்டிய அதே ஆர்வத்தை அவரும் காட்டினால் தான் அது உருவாகும் என கூறியுள்ளார் .

தமிழன் யார் என்கிற கேள்விக்கு பதில் கூறிய கமல் “தமிழ் பேச தெரிய வேண்டும். நம் மொழியில் பேசியவுடன் சந்தோசம் ஏற்படனும்.எனக்கு தமிழ் சினிமாவில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அதிருப்தியாக இருந்தது. அதன் பிறகு மலையாளத்திற்கு ஓடி போய்விட்டேன். கேரளத்தில் தான் என்னால் நிஜமான சினிமாவை கற்றுக்கொள்ள முடிந்தது. அதை விட்டால் பாலச்சந்தர் தான். அதன் பிறகு பாராதிராஜா என்பவரை படம் எடுக்க விட்டார்கள். நான் பாதி மலையாளி ஆகிவிட்டேன். கமல் தமிழன் என கூறினால் சண்டைக்கு வரும் மலையாளிகள் இருக்கிறார்கள் என கூறினார் .

ரகுமானின் பாடல்களை பற்றி கேட்ட போது “இந்தியன் படத்தின் ஷூட்டிங்கில் முதலில் ஷங்கர் கப்பலேறி போயாச்சு பாடலை போட்டு காட்டினார். எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இயக்குனரிடம் கூறி விட்டேன். அதன் பிறகு ஷூட்டிங் செய்யும் போது அது வேறு பாடல் போல இருந்தது. நமது involvement இருந்தால் தான் புரியும்.” என கூறினார் .