“தலைவன் இருக்கின்றான்” படத்திற்காக கமலுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைத்துள்ளார்.

இந்த படம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சில படங்கள் தயாரிக்கும்போது மட்டும் மிகச்சிறந்த உணர்வுகள் கிடைக்கும், அவ்வாறான ஒரு படம் தான் ‘தலைவன் இருக்கின்றான்’. இந்த படம் குறித்த முழு விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமலுடன் இணைந்து இந்தி நடிகர் சாயிஃப் அலிகான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர்கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி