ThalaivaOnDiscovery: பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்தது….. விரைவில் டிஸ்கவரி சேனலில் ….வீடியோ

பெங்களூரு:

‘Man vs Wild’ புகழ் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2 நாட்கள் கட்சிகள் விரைவில் டிஸ்கரி சேனலில் வெளியாக உள்ளது. இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவா ஆன் டிஸ்கவரி (# ThalaivaOnDiscovery) என்று ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டு உள்ளார்.

மும்பையைச் சேர்ந்த  நிறுவனம் ஒன்று பியர்ல்ஸ் கிரில்ஸ் உடன் ரஜினி இணைந்து  வனவிலங்கு சரணாயலத்தில் நடிக்கும் 2 நாள் டாகுமெண்டரி படத்தை தயாரித்தது.  இந்த படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபுர் புலிகள் சரணாலயத்தில்  கடந்த மாதம்  நடைபெற்றது.

இந்த நிலையில், பியர் கிரில்ஸ், ரஜினிகாந்துடன் உள்ள மோஷன் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்..  அத்துடன் ரஜினிகாந்துடன் நடித்துள்ள காட்சி தயாராகிக்கொண்டிருக்கிறது… விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாகும்…என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  நான் உலகம் முழுவதும் பல நட்சத்திரங்களுடன் பணிபுரிந்தேன், ஆனால் இது எனக்கு சிறப்பு. லவ் இந்தியா. #ThalaivaOnDiscovery என பதிவிட்டு உள்ளார்.

ரஜினி ரசிகர்கள் இந்த டாகுமெண்டரியை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்…