இணையத்தில் லீக்கான தலைவர் 167 போட்டோஷுட் படங்கள்….!

 

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 167 படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. ஏப்ரல் 10-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளது.

இப்படத்துக்கான போட்டோஷுட் மற்றும் படத்தில் ரஜினியின் லுக் ஆகியவற்றை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்துக்கான போட்டோஷுட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் என்பது இப்புகைப்படங்கள் மூலம் உறுதியாகிவுள்ளது. ரஜினி காவல்துறை உடையின் மீது, ப்ரவுன் கலர் கோட் போட்டுக் கொண்டு கையில் கம்பியுடன் அமர்ந்திருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் பெரும அதிர்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.