தலைவர் 168 படத்திற்கு தலைப்பு ‘அன்னாத்த’…? மன்னவன்..?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மீனா , குஷ்பூ இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இவர்களுடன் ஸ்ரீமன் மற்றும் விஸ்வாந்த் ஆகியோரும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தலைவர் 168 படத்திற்கு இரண்டு பெயர்களை படக்குழு தேர்வு செய்துள்ளதாம். ஒன்று மன்னவன், மற்றொன்று அன்னாத்த.

அன்னாத்த என்ற தலைப்பு தான் படக்குழு அனைவருக்கும் பிடித்துள்ளதாம். தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.