‘பெல் பாட்டம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘தலைவாசல்’ விஜய் ஒப்பந்தம்….!

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் ‘பெல்பாட்டம்’. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார்.

அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இந்த வருடத்தின் கடைசியில் படப்பிடிப்புடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2, 2021 அன்று ‘பெல்பாட்டம்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி விமானம், முகக் கவசங்கள், படக்குழுவினருக்குக் கையில் எப்போதுமே வாட்ச் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ‘பெல் பாட்டம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ‘தலைவாசல்’ விஜய். 2019-ம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள்’ என்ற இந்திப் படத்துக்குப் பிறகு, அவர் நடிக்கவுள்ள 2-வது படமாக ‘பெல் பாட்டம்’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்புக்காக நேற்று (ஆகஸ்ட் 6) படக்குழுவினருடன் இவரும் பயணப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.