வாழ்க்கை சரித்திரத்தில் நடிக்கும் – ‘தலைவாசல்’ விஜய்…

 

குணச்சித்திர கேரக்டர்களுக்கு, பொருந்தி வரும் ஒரு சில நடிகர்களில் – ‘தலைவாசல்’ விஜயும் ஒருவர்.

மலையாளத்தில் அவர் இப்போது அலி அக்பர் என்பவர் இயக்கும், புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

1920 களில் கேரளாவின் மலபார் பகுதியில் போராளியாக திகழ்ந்தவர் – ‘வரியகுன்னத்து குஞ்சகமது ஹாஜி’.

அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் தான் இது. அந்த படத்தில் ஹாஜியாக நடிக்கிறார் ‘தலைவாசல்’ விஜய்.

வயநாடு பகுதியில் உள்ள காடுகளில் இதன் ஷுட்டிங் நடந்துள்ளது. அங்கு கேரவன்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. இதனால் அங்குள்ள வீடுகளில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவும் தங்கி இருந்து, நடித்துள்ளனர்.

தலைவாசல் விஜய் ஏற்கனவே சமூக புரட்சியாளர் நாராயண குருவின், சரித்திரத்தை சொல்லிய, ‘யுகப்புருஷன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விஜய் நடிக்கும் இரண்டாவது – பயோபிக்.

– பா. பாரதி