தனது 103-வது பிறந்தநாளில் மறுஜென்மம் எடுத்து வந்தாரா எம்.ஜி.ஆர்…?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாகவும் , எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும்.

இதில் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர். இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த சாமியின் தோற்றத்தை அரவிந்த சாமி தனது ட்விட்ட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தலைவி படத்தில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த் சாமி பாடி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.