ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.

ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தலைவி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதெராபாத் கிளம்பியுள்ளார் கங்கனா. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.