விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “’தலைவி’ படத்தில் கங்கணாவுக்கு நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்பில் வருகிறார்.

‘ஹங்கர் கேம்ஸ்’, ‘கேப்டன் மார்வல்’, ‘ப்ளேட் ரன்னர் 2049’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், கங்கணாவின் தோற்றங்களை வடிவமைக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு.