கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் ’தலைவி’ படமும் ஒடிடியில் வெளியாகும் என்று பேச்சு எழுந்துள்ளது.


’தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். அவர் கூறும்போது, ’தலைவி படம் ஒடி டி தளத்துக்கும் அதிகமான ரிலீஸ் மதிப்பை கொண்டது’ என்றார். கங்கனாவின் கருத்துப்படி ’தலைவி’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகே ஒடிடிதளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏஎல்விஜய் இயக்கிய இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.