அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக டெல்லியை நோக்கி பயணிக்கும் தளபதி 63 டீம்… !

விஜய் – அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

தளபதி 63 டைட்டிலுடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிக்க இருப்பதாகவும் படத்தின் கடைசி 10 அல்லது 15 நிமிடங்கள் அவர் நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 5 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. பின்னர் மே 3-ம் தேதி முதல் டெல்லியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: atlee, shahruk khan, Thalapathy 63, vijay
-=-