விஜய் பிறந்த நாள் அன்று ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் வெளியிடப்படும்…!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து , அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 63’ இன்னும் பெயர் வைக்க படாத இந்த படத்திற்கு விஜய் பிறந்த நாள் அன்று வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் அன்று ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி