மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர்.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை அடுத்து விஜய்யின் 66-வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.