அதர்வாவின் ’தள்ளிப் போகாதே’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!

‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் ஆர்.கண்ணன். இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நின்னு கோரி’ படத்தின் ரீமேக்காகும்.

மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரித்தும் வருகிறார் இயக்குநர் கண்ணன்.

இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அமிதாஷ் அமிதாஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

தற்போது அதர்வா படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தள்ளிப் போகாதே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.