த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரம்லோ’. படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்திருக்கிறார்.


தற்போது, மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிக்கும் ‘கடுவா’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் தமன்.