‘ஈஸ்வரன்’ படக்குழுவை பாராட்டும் தமன்….!

சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது இப்படத்தில் .

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் சிம்பு விலங்கு நல ஆர்வலர்கள் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்த செய்தி நேற்று வெளியானது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன், ஈஸ்வரன் படக்குழு பணியாற்றும் விதத்தை பாராட்டி பதிவு செய்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருடன் பணியாற்றுவது அதிக எனர்ஜியை தருகிறது என புகழாரம் சூட்டியுள்ளார். படத்தின் இசை பணிகளை மேற்கொண்டு வரும் தமனிடன் பாடல் குறித்த அப்டேட்டுகளை கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.