தமன்னா திருமணத்துக்கு ரெடி – தமிழ்நாட்டு மாப்பிள்ளைகள் ரெடியா?

சென்னை

மிழ்நாட்டில் பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தால் திருமனம் செய்துக் கொள்ள தயாராக உள்ளதாக நடிகை தமன்னா கூறி உள்ளார்.

நடிகை தமன்னா தற்போது தென் இந்திய திரைஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.  சீனு ராமசாமியின் இயக்கத்தில் இவர் நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.   சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இவர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ளார்.

தமன்னா சமிபத்தில் பேட்டி ஒன்றில் “கண்ணே கலைமானே படத்தில் எனக்கு வங்கி அதிகாரி வேடம் அளிக்கப்பட்டுள்ளது.   இயக்குனர் சீனு ராமசாமி எனக்கு நாயகன் உதயநிதிக்கு சமமான கதாபாத்திரத்தை அளித்துள்ளார்.   எனது நடிப்பை பாராட்டி அவர் எனக்கு திருநெல்வேலி அல்வா வாங்கித் தந்தார்.

இந்த படத்தில் எனக்கு கவர்ச்சிக் காட்சி உள்ளது.   அது உடலை காட்டும் கவர்ச்சி இல்லை.  முகத்தில் தெரியும் கவர்ச்சி.   பலர் என்னிடம் நான் தமிழ் நன்றாக பேசுவதாக பாராட்டுகின்றனர்.

நான் தற்போது தமிழ்ப் பெண் தான்.  எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை தமிழ்நாட்டில் கிடைத்தால் நான் திருமணம் செய்ய தயாrராக உள்ளேன்.  இதை நான் உறுதியாக சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.