[embedyt] https://www.youtube.com/watch?v=ipeWQ67AziU[/embedyt]

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதை தொடர்ந்து இப்படத்தின் டீசெர் வெளியிட்டுள்ளது படக்குழு.