தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் ‘உலகம் விலைக்கு வருது’

குணசித்திர நடிகரான தம்பி ராமையா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.  தனது  மகன் உமாபதியை கதாநாயகனாக நடிக்க வைத்து  ‘உலகம் விலைக்கு வருது’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

தம்பி ராமையா ஏற்கனவே ‘மனுநீதி’ மற்றும் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியதால், தனது இயக்குனர் தொழிலை சற்று காலம் தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் தனது மகனை சினிமாவில் பிரபலமாக எண்ணி புதிய படம் இயக்கி முடிவு செய்தார். இதையடுத்து, ’உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பில்  படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் புதுமுக நாயகனாக தனது மகன் உமாபதியை நடிக்க வைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில்,   மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக பி.கே.வர்மா, இசையமைப்பாளராக தினேஷ், எடிட்டராக கோபிநாத், கலை இயக்குநராக வைரபாலன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.