தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க.

மு.க.ஸ்டாலினை விட ,தம்பிதுரை மீது தான் கடும் கோபத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி.

கடந்த சில தினங்களாக மத்திய பா.ஜ.க.அரசை அவர் வறுத்தெடுத்து வந்தார்.உச்சமாக மக்களவையிலேயே- மோடி அரசை தம்பிதுரை விளாசியதால் அவர் மீது மோடிக்கு கடும் கோபம்.

கூட்டணியை இறுதி செய்வதற்காக  சென்னை வந்த பியூஷ்கோயல், அ.தி.மு.க. தலைமையிடம் விதித்த முதல் நிபந்தனை- தம்பிதுரைக்கு சீட் கொடுக்க கூடாது என்பது தான்.

‘’இது மோடியின் கட்டளை ‘’என சொல்லப்பட்டதால்- அதனை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.

அதனை முன் கூட்டியே தம்பிதுரை அறிந்திருந்தார். அதனால் தான் ,’’கரூர் தொகுதியில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை’’ என்று விரக்தியுடன் பேட்டி கொடுத்தார்.

கரூர் தொகுதியில் நான்குமுறை எம்.பி.யாக இருந்தவர் தம்பிதுரை.முதன் முதலில் அந்த தொகுதியில் போட்டியிட்ட போது.அது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ராஜீவ்காந்தியை சந்தித்து –கரூரை தம்பிதுரை பெற்று கொண்டார். காங்கிரசுக்கு வேறு தொகுதி ஒதுக்கப்பட்டது.

–பாப்பாங்குளம் பாரதி