தம்பிதுரை சொல்லச் சொன்னதையே சொன்னேன்!: பொன்னையன் அதிரடி

சென்னை:

“ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார்  என்று நான் சொன்னதெல்லாம் தம்பிதுரை கூறியபடியதான். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்று பொன்னையன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த டிசம்பர் 5ந்தேதி இறந்துவிட்டார் என்று மருத்துவமனை அறி வித்தது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

பிறகு, ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களும் இதே சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்த னர்.  ஓபிஎஸ் அணியை சேர்ந்த பி.எச்.பாண்டியன், அவரது மகனும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான மனோஜ்பாண்டியன் ஆகியோரும்  ஜெய லலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  அவர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டார் என்றும், அவர் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள் அதிர்ச்சிகரமான தகவல் களை தெரிவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் பந்து விளையாடினார் என்றும், பேசுகிறார், வழக்கமான உணவை உட்கொள்கிறார் என்றும் அதிமுக சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, பொன்னையன் போன்றோர் செய்தியாளர்களிம் தெரிவித்து வந்தனர்.

ஆனால், சசிகலாவிடம் இருந்த ஓபிஎஸ் தனியாக பிரிந்து வந்து விட்டதால் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது என்று பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரத்தக்காயங்களுடன் இருந்தார் என்றும், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டு கீழே விழுந்ததை நேரில் பார்த்த பணிப்பெண்ணை தற்போது காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்தால் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என்றும் பொன்னையன் கூறி உள்ளார்.

மேலும், “மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது தம்பித்துரைதான், என்னை  ஜெ. நன்றாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார், விரைவில் வீடு திரும்புவார், பேப்பர் படிக்கிறார், இட்லி சாப்பிடுகிறார் என்று செய்தியாளர்களிடம் சொல்லச் சொன்னார்” என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

பொன்னையனின் தற்போதைய பேச்சு கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.