தம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி!

--

டில்லி:

மீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை துணைத்தலைவர் தம்பிதுரை தலைமையிலான எம்.பிக்கள் (சசிகலா அணியினர்) தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் மோடி நேரம் ஒதுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தம்பிதுரை “ காவிரி, ஜல்லிக்கட்டு உட்பட எத்தனையோ பிரச்னைகளுக்காக அவரை சந்திக்க வந்தோம். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மன  வேதனை அடைந்துள்ளோம்..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை சந்திக்க வேண்டியது மோடியின் கடமை. அவர் பிரதமர் என்றால், நான் மக்களவைத் துணைத் தலைவர்.

அனைவருமே மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான். மக்கள் பிரச்னையை மத்திய அரசிடம் நாங்கள் கொண்டு  செல்கிறோம். ஆனால், மோடி எங்களை சந்திக்கவில்லை” என்று வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் மோடியை சந்திக்க தம்பிதுரை அனுமதி கேட்டிருந்தார். உ.பி. உத்தரகாண்ட் உட்பட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவே சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

அவருக்கு நேற்று நேரம் ஒதுக்கப்பட்டது.  மோடியை சந்தித்து பூங்கொத்து அளித்த தம்பிதுரை, தெரிவித்தார்.

“மக்கள் பிரச்சினையை தெரிவிக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரம் ஒதுக்கிவிட்டார். எப்படியோ ஒருவழியாக தம்பிதுரையின் மனவேதனையை பிரதமர் மோடி தீர்த்துவிட்டார்” என்று டில்லி அரசியல் வட்டாரங்களில் கிண்டலாக பேசிக்கொள்கிறார்கள்.