”டுமீலிசை” என அழைத்தால் நான் கவலைப்படமாட்டேன் : தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை

ன்னை கிண்டல் செய்வோரைப் பற்றி தமக்கு கவலை இல்லை என ப ஜ க தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.

சமூக வலைதளங்கலில் பெரிதும் விமர்சிக்கப் படுபவர் தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.   இவருடைய தோற்றம், த,லை முடி,  ஆகியவை எப்போதுமே கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.   நெட்டிசன்கள் பலரும் இவரை டுமீலிசை எனவே வர்ணிக்கின்றனர்.   இவரது விக்கிபீடியா பக்கமும் ஒரு முறை இது போல மாற்றப்பட்டது.

இது குறித்து தமிழிசை, “நான் திறம்பட செயல் படுவதால் தான் என்னை இவ்வாறு தாக்கி வருகிறார்கள்.    பா ஜ க வின் மாநிலத்தலைவர் வலிமையாக இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை.   எனது செயல்பாடுகளில் குற்றம்  காணமுடியாததால், எனது உயரம்,  தோற்றம், தலைமுடி இதைப் பற்றி விமர்சனம் செய்கின்றனர்.   அவ்வளவு ஏன் என்னை கிண்டலாக டுமீலிசை என அழைப்பது போல் எனது விக்கிபீடியா பக்கத்திலும் தமிழிசை என இருந்த என் பெயரை டுமீலிசை என மாற்றினார்கள்.   அப்படி மாற்றியதனால் எனக்கு ஒரு கவலையும் இல்லை   சொல்லப் போனால் அவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது” என கூறி உள்ளார்.