சென்னை

வெறும் நான்கு பேருந்துகளை இயக்கி தனியார் லாபம் ஈட்டும் போது நாற்பதாயிரம் பேருந்து உள்ள அரசுக்கு நஷ்டம் எப்படி ஏற்படும் என தமிழிசை சௌந்தரரஜன் கேட்டுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்துள்ளது.   தொழிற்சங்கங்களிடையே நடைபெரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை.  அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.    வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளன.

இது குறித்து பாஜக வின் மாநிலத் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.  அதில் “நான்கு பஸ்களை மட்டும் இயக்கும் தனியார் பேருந்து முதலாளிகள் லாபம் ஈட்டுகின்றனர்.   ஆனால் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு ஏன் நஷ்டம் அடைகிறது?”  என கேள்வி எழுப்பி உள்ளார்.   இந்த டிவீட் பலராலும் பதியப்பட்டு வைரலாகி வருகிறது.