எஸ் வி சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை : தமிழிசை பரிந்துரை

சென்னை

பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகரான எஸ் வி சேகர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.  இவர் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.  இவர் சமீபத்தில் சமூக வலை தளம் ஒன்றில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தவறான செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார்.   அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

எஸ் வி சேகர் முன் ஜாமீன் கேட்டு செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது   எஸ் வி சேகர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்ததை ஒட்டி,  அவரை அங்கு சென்று கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து, “எஸ் வி சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நான் கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளேன்.  இது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்து விரைவில் நட்வடிக்கை எடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.